தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை…

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில் இன்று காலை 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக  அமெரிக்க நிலவியல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலநடுக்கம்  தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றும்  அமெரிக்க நிலவியல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள மின்டானோ தீவில், டாவோ நகரை மையம் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.

இந்தப் பூகம்பம் நிலத்தடியில் 59 கி.மீ ஆழத்தில்  நிலைகொண்டு இருந்த நிலையில்   நிலநடுக்கம் 6.9 ஆக பதிவாகி இருந்தது.

இந்தப் பூகம்பத்தால், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி அலைகள் எந்நேரமும் உருவாகலாம்  என்றும்  அந்த அறிக்கையில் எச்சரிக்கபப்ட்டுள்ளது.

எனினும்  இந்தப் பூகம்பத்தால்,  ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

இதேவேளை  பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் சான்டோஸ் நகரை மையம் கொண்டு பூமிக்குக் கீழே 60 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் மிகசக்தி வாய்ந்த சுனாமி அலைகள், இந்தோனேசியா கடற்கரையையும், பிலிப்பைன்ஸ் கடற்பகுதியையும் தாக்க வாய்ப்புள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...