தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிலிப்பைன்ஸ் மணிலாவில் பாரிய நிலநடுக்கம்!

இன்று பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் தெற்குப் பிராந்தியத்தை நிலஅதிர்வு தாக்கி உள்ளது . லியான் என்ற கரையோரப் பட்டினத்தில் . பிற்பகல் 1.28 அளவிலேயே இது சம்பவித்துள்ளது . இந்தப் நிலஅதிர்வின் ரிக்டர் அளவு 6.2 என்று கணித்துள்ளார்கள் .
தலைநகரான மனிலாவிலும் , அதனை அண்டிய பகுதிகளிலும் கட்டடங்கள் ஆட்டங் கண்டாலும் , இந்த உயிர்ச் சேதமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக அரசதலைவர் மாளிகை ஊழியரும் மற்றும் இங்குள்ள அரச கட்டடங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த அரச ஊழியரும் தமது வேலை இடங்களை விட்டு வெளியேறி விட்டதாகவும், பாடசாலை மாணவர்கள் கட்டடங்களை விட்டு வெளியேறி வெளியில் வந்து நின்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் இதே அளவு கொண்ட இன்னொரு பூகம்பம் நாட்டின் தெற்குப் பகுதி நகரமொன்றைத் தாக்கியதில் , எண்மர் மரணித்து , 250பேருக்கு மேல் காயப்பட்டிருந்தார்கள் என்பது இங்கே குறிபிடத்தக்கது

Comments
Loading...