தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிளஸ்-2 முடிவுகள் 9ஆம் திகதிக்குள் வெளியாக வாய்ப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 7 அல்லது 9-ந்தேதி வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ்–2 தேர்வு மார்ச் 4–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் 8 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.exam-results

விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 23–ந்தேதி வரை நடந்தது. இதையடுத்து மதிப்பெண்கள் பதிவு செய் யும் பணி நடந்த வருகிறது. சென்னை கோட்டூர்புரத் தில் உள்ள டேட்டா சென் டரில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட் டது. இரவு – பகலாக நடைப் பெற்று வரும் இந்த வேலை ஒரு சில நாட்களில் நிறைவு பெறுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் 7–ந்தேதி பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால் வினாத்தாள் திருத்தும் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குறைவாக இருந்ததால் தாமதமாக நிறைவுப் பெற்றது. அதனால் தேர்வு முடிவு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தலுக்கும் பிளஸ்–2 தேர்வு முடிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. திட்டமிட்டப்படி தேர்வு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. மே முதல் வாரத்தில் முடிவை வெளியிடலாம் என தேர்வுத் துறை உத்தேசித் துள்ளது.

7 அல்லது 9–ந்தேதி முடிவு வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பிளஸ்–2 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தேர்வு முடிவு வெளியாகும் தேதியை முடிவு செய்து அறி விக்க இருக்கிறார்.

Comments
Loading...