தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிளேபாய் வீடியோவில் டிரம்ப்? அமெரிக்காவில் பரபரப்பு

201610020706405670_donald-trump-reportedly-appeared-in-a-playboy-video_secvpfஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே ‘நீயா, நானா?’ என்கிற வகையில் பலத்த போட்டி நிலவுகிறது.

தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வந்த டொனால்டு டிரம்ப், இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அது, அவர் ‘பிளேபாய்’ ஆபாச வீடியோவில் (சிற்றின்ப நாட்டம் கொண்டவர்களின் வீடியோ படம்) தோன்றி இருப்பதாகும். இது தொடர்பான வீடியோ ஒன்றை அமெரிக்காவின் ‘புஸ்பீட் நியூஸ்’ நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ‘பிளேபாய்’ பத்திரிகை ‘ஆண்டின் சிறந்த பிளேபாயை’ தேர்வு செய்து வெளியிடுவதற்காக, டிரம்ப், ‘பிளேபாய்’களை (சிற்றின்ப நாட்டம் கொண்ட இளைஞர்கள்) நியூயார்க் நகருக்கு அழைக்கிறார். அப்போது அவர் விலை உயர்ந்த ‘ஷேம்பைன்’ மது பாட்டிலை திறந்து, ‘பிளேபாய்’ சின்னத்தின்மீது ஊற்றுவது போல காட்சி தருகிறார்.

அப்போது அவர், “அழகு அழகுதான், நியூயார்க்கில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்கிறார்.

இந்த வீடியோ, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில், புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Comments
Loading...