தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிள்ளைகள் வெளிநாட்டில்! தனிமையில் இருந்த தந்தை விரக்தியில் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை ஸ்ரீ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனக்குதானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்.தீக்காயங்களுக்கு உள்ளான அவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும், அவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...