Designed by Iniyas LTD
‘பி’ பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் களத்தில்
ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடக்கும் மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே களத்தடுப்பை தெரிவு செய்தது. அயர்லாந்து அணிக்கு ஸ்டெர்லிங் (10) தொடக்கத்திலே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
மற்றொரு தொடக்க வீரரான போர்டர்பீல்ட் (29) ஜிம்பாப்வே பந்துவீச்சை போராடி சமாளித்த நிலையில் வெளியேறினார். எட் ஜோய்ஸ் அசத்தலாக விளையாடி வந்தார். இவரும் பால்பிரினேவும் அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.
இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அணியின் ஓட்டங்கள் 217 என்று இருக்கும் போது எட் ஜோய்ஸ் (112) சதம் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பால்பிரினே அரைசதம் கடந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்த கெவின் ஓ பிரைன் (24), வில்சன் (25), மோனி (10), நிர்யால் ஓ பிரைன் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடி காட்ட ஆரம்பித்த பால்பிரினே 97 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்த போது ஓட்ட முறையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
இதனால் அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்தது. டோக்ரெல் (5), குசாக் (2) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் பந்து வீச்சில், சாடாரா, வில்லியம்ஸ் தலா 3, பன்யான்காரா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.