Designed by Iniyas LTD
புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை சுவிசில் அதிகரிப்பு
சுவிசில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் சுவிசில் உள்ள Addiction Switzerland என்ற போதை தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், புகைபிடிப்பதினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதேறும் 9500ஆக உயர்ந்துள்ளது. சுவிசில் 4 குடிமகன்களில் ஒருவர் புகைபிடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
15 வயது முதல் 19 வயதுள்ள இளம் வயதினரிடையேயான புகைபிடிக்கும் பழக்கம் 2011ம் ஆண்டைக் காட்டிலும் 26.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிகரெட்டுகளின் எண்ணிக்கை குறைந்து கையினால் தயாரிக்கப்படும் சுருட்டு போன்ற புகையிலையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கும் 2014ம் ஆண்டுக்கும் இடையிலான காலகட்டத்தில் 13.9 சதவிகிதத்திலிருந்து 20.4 ஆக உயர்ந்துள்ளது. ஹுக்கா வகையிலான தண்ணீர் பைப் வடிவ புகைபிடிப்பான்களின் எண்ணிக்கையும் 1.4 சதவிகிதத்திலிருந்து 3.6 ஆக உயர்ந்துள்ளது. புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்களைக் குறைப்பதன் மூலம் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையை கொஞ்சம் குறைக்கலாம் என்றும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.