தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய அரசியல் தீர்வில் ஜேர்மன் முறைமை!

ranilபுதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில் நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை முன்­வைக்கும் விட­யத்தில் ஜேர்­ம­னி­யி­லுள்ள ஆட்­சி­மு­றைமை தொடர்பில் ஸ்ரீலங்கா அர­சாங்கம் கவனம் செலுத்தி வரு­வ­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது.

குறிப்­பாக அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது திருத்த சட்­டத்­தி­லுள்ள அதி­கா­ரங்­களை அவ்­வாறே வைத்­தி­ருப்­பது என்றும் அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீர்வுத் திட்­ட­மொன்­றுக்கு செல்­வ­தெ­னவும் ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ள நிலையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக சமஷ்­டி­மு­றைமை கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.

ஆனால் அர­சாங்­கத்­தி­லுள்ள முக்­கியத் தரப்­பி­னர்கள் சமஷ்டி முறை­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் ஒற்­றை­யாட்சி முறை­மைக்­குள்­ளேயே தீர்வு வழங்­கப்­ப­டு­மெ­னவும் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிடம் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக வடக்கும், கிழக்கும் ஒரு­போதும் இணைக்­கப்­ப­ட­மாட்­டாது. எனினும் பல்­வேறு தரப்­பி­னரின் கோரிக்­கைக்கு அடிப்­ப­டையில் வடக்கும், கிழக்கும் ஒருங்­கி­ணைப்­புடன் செயற்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் அறி­ய­மு­டி­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க இந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்வு விவ­காரம் தொடர்பில் ஆங்­கில ஊட­க­மொன்­றுக்கு கருத்து வெளி­யிட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது திருத்த சட்­டத்தின் ஏற்­பா­டு­களும் மாகா­ண­சபை முறை­மையின் ஏற்­பா­டு­களும் அவ்­வாறே இருக்கும் என குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் தற்­போது இந்த தீர்வு விட­யத்தில் அர­சி­ய­ல­மைப்பில் என்ன இருக்­கின்­றதோ, அது தொடர்ந்தும் இருக்கும். எனினும் தீர்வு முறை என்று வரும்­போது நாங்கள் ஜேர்மன் முறைமை தொடர்பில் ஆராய்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். அத்­துடன் வேறு­பல முறை­மைகள் குறித்தும் ஆராய்வோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க திட்­ட­வட்­ட­மான முறையில் கூறி­யுள்ளார்.

இதே­வேளை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது சுவிட்­ஸர்­லாந்து, மற்றும் ஸ்கொட்­லாந்து ஆகிய நாடு­களின் தீர்வு முறைமை தொடர்பில் தொடர்ச்­சி­யாக ஆராய்ந்து வரு­கி­றது. இந்த நாடு­க­ளுக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் விஜயம் செய்து தீர்வு முறை­மைகள் குறித்து ஆராய்ந்த வரு­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க இது தொடர்பில் மேலும் கருத்து வெளி­யிட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வ­தற்கு நான் காத்­தி­ருக்­கின்றேன். மக்­களின் கருத்­துக்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்ற நிபுணர் குழுவின் பரிந்­து­ரைகள் கிடைத்­ததும் இதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். அதன் பின்னர் சகல அர­சியல் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு நான் எதிர்­பார்க்­கின்றேன் என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய மற்றும் தமிழ்­பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை அங்­கீ­க­ரிக்­கின்ற அர­சி­யல்­தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது இணைந்த வடக்­கி­ழக்கில் சமஷ்டி முறை­மையின் கீழ் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்­வுடன் அர­சி­யல்­தீர்­வுத்­திட்டம் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றது.

அர­சாங்கம் இது தொடர்பில் இது­வரை இறுதி முடிவை எடுக்­காத நிலையில் அர­சாங்­கத்­திற்கும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்­கு­மி­டையில் விரைவில் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அந்த வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் நோக்கில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்புப் பேர­வை­யாக மாற்­றப்­ப­டு­வ­தற்­கான பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­க­னவே சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்நிலையில் இவ்வாரம் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு குறித்த கருத்துக்களையும் யோசனைகளையும் பெறும் நிபுணர் குழுவானது நாடளாவிய ரீதியில் தமது அமர்வுகளை நடத்தி வருகின்றது. இதன்போது பல்வேறு தரப்பினரும் மிகவும் பரந்துபட்ட ரீதியிலான யோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் விரைவில் இந்த நிபுணர் குழுவானது தமது பரிந்துரைகளை பிரதமர் அலுவலகத்திற்கு முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments
Loading...