தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய கட்சியின் செயலராளராக பவித்திரா வன்னியராச்சி

கடந்த மேல் மாகாண மாதாந்த கூட்டத்தில் கடுமையாக தாக்கப்பட்ட உபாலி கொடிகார மற்றும் மஹரகம நகரசபை முன்னாள் மேயர் காந்தி கொடிக்காரவுக்கு இடையில் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பை ஏற்படுத்திய காந்தி கொடிக்கார, உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.pavithra-vanni

இவ்வாறு உதவி கோரிய சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் புதிய கட்சியில் செயலாளர் பதவியை தனக்கு வழங்குமாறு அவர் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கூட்டு எதிர்க்கட்சிக்குள் பதவி தொடர்பில் அதிகார மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் காந்தியின் கோரிக்கை மஹிந்தவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பங்களில் புதிய கட்சியின் செயலாளர் பதவிக்கு பலர் காத்திருக்கின்ற நிலையில் பார்ப்போம், இவை குறித்து நான் கதைக்கின்றேன் என கூறிய மஹிந்த தொலைப்பேசி அழைப்பை துண்டித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பவித்திரா வன்னியராச்சியை புதிய கட்சியின் செயலராளராக நியமிக்க மஹிந்த திட்டமிட்டுள்ளார். இது அந்தக்கட்சிக்குள் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் பலர் பிரிந்து செல்லவும் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மற்றுமொரு பெண் மஹிந்தவிடம் பதவி தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...