தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுக்குடியிருப்பில் இயங்கும் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 பேர் கொண்ட குழு பல்வேறு குற்றச் செயல்களையும் மக்கள் மீது தாக்குதல்களையும் நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிரண்டாம் கட்டை பகுதியிலே முச்சக்கரவண்டியை செலுத்துகின்ற சாரதி ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்

குறித்த தாக்குதலுக்கு உள்ளான நபர் மேலும் தெரிவிக்கையில் 12ம் காட்டிடை  பகுதியில் முச்சக்கரவண்டியை ஓடுகின்ற என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த ஒரு பகுதிக்கு வருமாறு கோரிய போது அவர்களை தெரியாது என்று கூறிய போது தான்,

உங்களிடம் ஏற்கனவே வாகனம் பிடித்திருக்கிறேன் என்று பொய்யை கூறி தன்னை ஓர் இடத்திற்கு அழைத்து அந்த இடத்தில் வைத்து இருவர் சரமாரியாக தாக்கியதாகவும்  அதனால் பாதிப்படைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.

 குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூங்கிலாறு உடையார்கட்டு 12 ம் கட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 பேர் அடங்கிய குழு ஒன்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும்,

கசிப்பு போதைவஸ்து பாவனை மற்றும் மக்களை தாக்குத்தல்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இவ்வாறான குற்றச் செயல்களை புரிகின்ற குழுக்களை அடக்குவதற்காக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஆளுநர் ஆகியோரை கவனத்திலெடுத்து இந்த சட்டவிரோத குழுக்களை அல்லது இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற குழுக்களை கட்டுப்படுத்தி  மக்களை அவற்றில் இருந்து காப்பாற்றுமாறு அந்த நபர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Comments
Loading...