Designed by Iniyas LTD
புதுக்குடியிருப்பில் சிறப்புற இடம்பெற்ற சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு..
சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்று (4) சிறப்புற இடம்பெற்றது
குறித்த நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பல்வேறு நிதி பங்காளர்களது அனுசரணையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு ம பிரதீபன் அவர்களது தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது
விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் அழைத்து செல்லப்பட்டு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றது
சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி ஈட்டியவர்களுக்கும்,
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முதுமையிலும் சிறப்புற சுயதொழிலில் ஈடுபட்டுவரும் முதியவர் ஒருவருக்கும் கலைநிகழ்வுகளில் ஈடுபட்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கும்,
நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர் முதியவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
நிகழ்வில் முதியவர்கள் சிறுவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி ,
மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகள் முதியவர்கள் சிறுவர்கள் பெற்றோர் நலன்விரும்பிகலென பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.



