தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புத்தளத்தில் பெருமளவான வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது!

வெடிமருந்துமறைத்து வைத்­தி­ருந்த பல இலட்சம் ரூபாய் பெறு­ம­தி­யான ஜெலட்னைட் வெடி பொருள் உள்­ளிட்ட மேலும் பல உப­க­ர­ணங்­களுடன் மூவரைக் கைது செய்­துள்­ள­தாக புத்­தளம் ஸ்ரீ பொலிஸ் நிலைய மோசடி ஒழிப்பு பிரி­வினர் தெரி­வித்­துள்ளனர். ஆன­மடு தோணி­கல பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போதே இந்த வெடி­பொ­ருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.
கைப்­பற்­றப்­பட்ட வெடி­பொ­ருட்­களை வைத்­தி­ருப்­ப­தற்­கான எந்த அனு­ம­திப்­பத்­தி­ரங்­களும் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளிடம் இருக்­க­வில்லை எனவும், இவை சட்­ட­வி­ரோ­த­மான முறை­யி­லேயே கைது செய்­யப்­பட்­ட­வர்கள் வசிக்கும் இரு வீடு­களில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும், நீர்­கொ­ழும்பு மற்றும் கிரி­வுல்ல ஆகிய பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து முச்­சக்­கர வண்­டியில் இவை இங்கு கொண்டு வரப்­பட்­ட­தாக கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் தெரி­வித்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.
640 ஜெலட்னைட் கூறுகள், 24 வெடிக்க வைக்­கப்­ப­யன்­படும் நூல் ரோல்கள், 650 டெட்­னேட்­டர்கள் என்­ப­னவே பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. மீனவர் போல வேட­மிட்ட ஸ்ரீலங்கா கடற்­ப­டையின் புல­னாய்வுப் பிரிவின் அதி­காரி ஒருவர் பல நாட்­க­ளாக இந்த வெடி பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு முயற்­சித்து வந்­துள்­ள­தோடு நேற்று முன்­தினம் இந்த வெடி­பொ­ருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு முற்­பட்ட போதே புத்­தளம் பொலிஸ் நிலைய மோசடி ஒழிப்பு பிரி­வினர் பலத்த சிர­மத்தின் மத்­தியில் சந்­தேக நபர்­களைக் கைது செய்­துள்­ள­துடன் வெடி பொருட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.
கைது செய்­யப்­பட்ட மூவரும் ஆன­மடு தோணிகல பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் எனவும், இவர்­களுள் 23 வயது இளை­ஞ­னுடன் அவ்­வி­ளை­ஞரின் தந்­தையும் அடங்­கு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களை கைப்­பற்­றப்­பட்ட வெடி பொருட்­க­ளுடன் மேல­திக நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஆன­மடு பொலிஸ் நிலை­யத்தில் புத்­தளம் மோசடி ஒழிப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...