Designed by Iniyas LTD
புத்தாண்டில் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
தல ’அஜித்’ தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்துடன் ரஜினிகாந்த் நடிப்பில் ’பேட்ட’ படமும் ரிலீசாக உள்ளது.
இந்த இரு படங்களும் ப்ரோமோஷன் வேலைகளில் பயங்கர பிசியாக இயங்கி வருகின்றன. இதில் பேட்ட படத்தின் டீசர் வெளியாகி வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.
விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருந்த வேளையில் புத்தாண்டு தினத்தில் விசுவாசம் டீசர் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
