தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புர்கா அணிந்தால் 6500 பவுன்ஸ் வரை அபராதம் சுவிஸ் இல் புதிய சட்டம்

350x350_IMAGE46644775சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் முகத்தை மறைக்கும்படி புர்கா அணியும் பெண்களுக்கு 6500 பவுன்ஸ் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் மக்கள் வசிக்கும் டிசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிந்து கடைகள், உணவகங்கள், அரசு கட்டிடங்கள் என்று வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி புர்கா அணிந்து வரும் பெண்களுக்கு 6500 பவுன்ஸ் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கான சட்டத்திற்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்காவுக்கு எதிராக தான் அவர்கள் வாக்களித்துள்ளனர். டிசினோவுக்கு சுற்றுலா செல்லும் முஸ்லீம் பெண்களும் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிசினோவில் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிவது சட்டவிரோதமானது என்று சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்கள் மற்றும் நாட்டின் எல்லையில் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

Comments
Loading...