மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்சமூகத்தின் நிதிஉதவியுடன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் கிளிநொச்சி மற்றும் ,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் புளியம்பொக்கணை நாகேந்திர புரத்தினை சேர்ந்த 160ற்கு மேற்பட்ட குடும்பங்கள் நாகேந்திரபுரம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த ஜந்து நாட்களாக இந்த மக்கள் பாடசாலையிலேயே தங்கிவாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களின் வாழ் இடங்கள் எல்லாம் தண்ணீர் வடிந்தோடாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் பாடசாலையில் தங்கியுள்ள மக்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியிரால் உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்றுமாலை மாலை இரண்டாம் கட்டமாக ஒருதொகுதி உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்த உணவு பொதிகளை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் மக்களுக்கு வழங்கிவைத்துள்ளார்கள்.