தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலம்பெயர் நாடுகளில் வாழும் முன்னாள் போராளிகளுக்கு அன்பான வேண்டுகோள்!

senpakam 2இறுதி யுத்தத்தின் போது உயிர்தப்பி அடைக்கலம் தேடி, புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக வசித்து வரும் முன்னாள் போராளிகளே!

யுத்தத்தின் பின்னர் குடும்பங்களை இழந்து, சொந்ததங்களை இழந்து, தாய் தந்தையை இழந்து இன்றும் ஈழத்தில் பல குடும்பங்கள் வறுமையிலும், மன வேதனையிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை யாவரும் அறிவோம்.

அத்தோடு எம் தோலோடு தோல் நின்று களத்தில் களமாடி இன்று கைகள் இல்லாமலும் கண்கள் இல்லாமலும், கால்களை இழந்தும், நடக்க முடியாமல் படுக்கையில் வாழும் எம் சக போராளிகள் ஈழத்தில் படும் துயரங்களையும் அறிவோம். இன்று எம்மில் பலர் புலம்பெயர் நாடுகளில் அகதிகளாய் அடிக்கலம் புகுந்து தங்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியாய் வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் எம்மில் பலர் இன்று சமூக வலைதளங்கலான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றில் தாங்கள் வாழும் ஆடம்பர வாழ்க்கையினை புகைப்படமெடுத்து பெருமைக்காக போடுவது ஈழத்தில் துன்பப்படும் மக்களுக்கும் போராளிகளுக்கும் பெரும் வேதனையை தரும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

எனவே தயவு கூர்ந்து சமூக வலைதளங்களில் (பேஸ்புக்,டுவிட்டர் போன்ற), வெளிநாடுகளில் நீங்கள் வாழும் ஆடம்பரமான புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு செண்பகம் இணையதளம் ஊடாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

ஆசிரியர்

செண்பகம் இணையதளம்

Comments
Loading...