தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலம்பெயர் மக்களை நாடு திரும்புமாறு ரணில் அழைப்பு!

ranil_15புலம் பெயர் தமிழ் மக்கள் இலங்­கையின் வடக்கு தெற்கு பகு­தி­களின் அபி­வி­ருத்­திக்கு தமது முத­லீ­டு­களை மேற்­கொள்­ளலாம். அதற்­காக பகி­ரங்க அழைப்பை விடுக்­கின்றேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

வாக்­க­ளித்த மக்­க­ளுக்கும் வாக்­க­ளிக்­காத மக்­க­ளுக்கும் சிறப்­பான பொரு­ளா­தா­ரத்­துடன் நாட்டை கட்­டி­யெ­ழுப்பி கைய­ளிக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும் என்றும் பிர­தமர் குறிப்­பிட்டார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் அனைத்து மக்­க­ளுக்கும் தமது சொந்தக் காணிகள் மீள கைய­ளிக்­கப்­படும். இதன் மூலம் மக்கள் அனை­வரும் தமது விவ­சாயக் காணி­களில் பயிர் செய்யும் நிலைமை ஏற்­ப­டுத்­தப்­படும் எனவும் ரணில் விக்­ர­ம­சிங்க கூறினார்.

இலங்கை பொரு­ளா­தார மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை காலை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இதில் கருத்து வெளியிடும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு கூறினார்.

இம் மாநாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட அமைச்­சர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க, எராண் விக்­கி­ரம ரட்ண, ரவி கரு­ணா­நா­யக, கலா­நிதி சாரதி அழுத்­கம உட்­பட பல அமைச்­சர்கள் கலந்து கொண்­ட­தோடு உலகப் புகழ்­பெற்ற பொரு­ளா­தார நிபு­ணர்­க­ளான சோரோஸ், ரிக்­கன்டோ ஹவஸ்மன், ஜேஸப் ஸ்டிபி­கிளிட்ஸ் உட்­பட பல நாடு­க­ளி­லி­ருந்து பொரு­ளா­தார நிபு­ணர்­களும்

முத­லீட்­டா­ளர்­களும் உள்ளூர் பொரு­ளா­தார முத­லீட்­டா­ளர்­களும் கலந்து கொண்­டனர்.

அங்கு பிர­தமர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

எதிர்­வரும் சனிக்­கி­ழமை (நாளை) பாரா­ளு­மன்­றத்தின் விசேட அமர்வு இடம்­பெ­று­கி­றது. இதன்­போது பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றும் பிரே­ரணை முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.இதன் மூலம் நாட்டு மக்­க­ளுக்கு நாம் வழங்­கிய உறுதி மொழி­யொன்றை நிறை­வேற்­று­கின்றோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றுப்­பட்ட பின்னர் அனைத்து மக்­க­ளுக்கும் தமது சொந்தக் காணிகள் மீள கைய­ளிக்­கப்­படும்.

இதன் மூலம் மக்கள் அனை­வரும் தமது விவ­சாயக் காணி­களில் பயிர் செய்யும் நிலைமை ஏற்­ப­டுத்­தப்­படும்.எமக்கு தேர்­தலின் போது வாக்­க­ளித்த மக்­க­ளுக்கும் வாக்­க­ளிக்­காத மக்­க­ளுக்கும் அர­சாங்கம் என்ற ரீதியில் கட­மை­களை நிறை­வேற்ற வேண்­டி­யது எமது பொறுப்­பாகும்.

எனவே நாட்டில் சிறப்­பான பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பி அதன் அனு­கூ­லங்­களை மக்கள் பெற்றுக் கொள்ளும் நிலை­மையை ஏற்­ப­டுத்­துவோம்.

இதன் போது எது­வி­த­மான பாகு­பாடும் காட்­ட­மாட்டோம். வாக்­க­ளித்த மக்­களும் வாக்­க­ளிக்­காத மக்­களும் அனை­வரும் இலங்கை மக்­க­ளே­யாவர்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஜேர்­மனி , கனடா, அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்­பட பல நாடு­களில் பரந்­துப்­பட்டு வாழ்­கின்­றார்கள்.

இவர்­களில் பெரும்­பா­லானோர் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்கள் இலங்­கையின் வடக்கின் அபி­வி­ருத்­திக்கு முத­லீ­டு­களை மேற்­கொள்ள முடியும்.

வடக்கில் மட்­டு­மல்ல கொழும்பின் அபி­வி­ருத்­திக்கும் இவர்­களால் பங்­க­ளிப்பு செய்ய முடியும்.

அது மட்­டு­மல்­லாது புலம்­பெ­யர்ந்து வாழும் சிங்­கள மக்­களும் தமது பங்­க­ளிப்பை இலங்­கைக்கு வழங்க முடியும். பெரும்­பா­லான புலம்­பெயர் சிங்­க­ள­வர்கள் கல்வித் துறையில் நிபு­ணத்­துவம் பெற்று வெளி­நா­டு­களில் தொழில் புரி­கின்­றனர்.

இவர்­களால் இலங்­கையின் கல்வித் துறையின் மேம்­பாட்­டுக்கு பங்­க­ளிப்பை வழங்க முடியும். எனவே புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் தமது தாய் நாட்­டிற்கு பங்­க­ளிப்பை வழங்­கு­மாறு அழைப்பு விடுக்­கின்றேன்.

இன்று நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எனவே அனை­வ­ரதும் கருத்­துக்­களும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு பெற்­றுக்­கொள்­ளப்­படும். உல­க­ம­ய­மாக்கல் ஊடாக இலங்கை அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.

மேற்­கு­லக நாடு­க­ளு­டனும் பொரு­ளா­தார நட்­பு­றவை ஏற்­ப­டுத்தி கொள்­வ­தோடு விசே­ட­மாக அயல் நாடான இந்­தி­யாவின் தமிழ் நாடு, மகா­ராஷ்­டிரா, குஜராத், ஆந்­திரா போன்ற மாநி­லங்­க­ளுடன் வர்த்­தக தொடர்­புகள் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்டு அம் மாநி­லங்­களின் முத­லீ­டு­களை இங்கு பெற்றுக் கொள்­வ­தற்கு நட­வ­டி­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

அத்­தோடு இந்­தி­யா­வுடன் வர்த்­தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்­கையும் செய்து கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. பாகிஸ்­தா­னோடு வர்த்­தக உடன்­ப­டிக்கை செய்து கொள்­வது தொடர்­பா­கவும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.அதே­போன்று சீனா, ஜப்­பா­னு­டனும் பேச்­சுக்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் ஆரம்­பக்­கட்ட பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

சீனாவின் பொரு­ளா­தாரம் ஸ்திர­ம­டைந்­துள்­ளது. எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்பது தெரியாது. அமெரிக்காவிலும் நெருக்கடிகள் உருவாகலாம். எனவே இந்து சமுத்திரத்தின் போட்டிமிக்க சமூகச் சூழலை எமது நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும்.

ஜோர்ஜ் சோரோஸ் உட்பட உலகப் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர்கள் முதலீட்டாளர்கள் எமது நாட்டுக்கு விஜயம் செய்து எமக்கு ஆலோசனைகளை வழங்குவது மகிழ்சியாக இருக்கின்றது.

எம் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Comments
Loading...