தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் – நூல் வெளியீடு

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்” ஓர் உலகளாவிய ஆய்வு என்னும் நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியம் நாட்டில் வெளியிட்டுவைக்கப்பட்டது . உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் சமூக, சமைய, மொழி ,கலாச்சார , பண்பாட்டு, பொருளாதார ,அரசியல் நிலமைகளை பற்றியும் , புகுந்த நாட்டிலும் சொந்த நாட்டிலும் ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு ஏற்படுத்திய தாக்கங்களையும் விளைவுகளையும் 16 நாடுகளுக்கும் மேலாக பயணம் சென்று ஆய்வு செய்து கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் மீண்டும் படைத்திருக்கும் , “புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ” ஓர் உலகளாவிய ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.

belgium-book

நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் தமிழர்களின் வரலாறு அழிந்துவிடக்கூடாது , அதற்கமைய புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகள் பிறந்து வளர்ந்தாலும் அவர்கள் எமது வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அத்தோடு எமது தேசத்தை சிங்கள பௌத்த பேரினவாத அரசிடம் இருந்து விடுவிக்க எமது வரலாறு எமக்கு அவசியம் என்பதையும் எடுத்துரைத்தார்.

Comments
Loading...