தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலிகளின் போக்குவரத்து அமைச்சுவின் அனுமதி அட்டை.

விடுதலைப் புலிகளின் போக்கு வரத்து கண்காணிப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட பயண அனுமதி அட்டை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு சாலைப் பகுதியில் குறித்த பயண அனுமதி அட்டை இன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், ஆழியவளை, தாளையடியை சேர்ந்த கெங்கேஸ்வரன் மேரி வெலிசியா என்பவரது பயண அனுமதி அட்டையே மீட்கப்பட்டுள்ளது.குறித்த பயண அனுமதி அட்டை விடுதலைப் புலிகளின் அமைப்பின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவினர் 13-10-2006ம் ஆண்டு குறித்த யுவதிக்கு வழங்கியுள்ளனர்.

இந்த பயண அனுமதி அட்டையின் முடிவு திகதி 12-10-2009 என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின்; காலத்தில் அன்றைய இளைஞர் யுவதிகள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு செல்ல விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 23 வயதுடைய குறித்த யுவதி 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் முடிந்த பின்னர் வரை இராணுவக் கட்டுப்பட்டுக்குள் செல்வதற்கு விடுதலைப் புலிகளின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவினர் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...