தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலியுடன் விளையாடும் கார் பந்தய வீரரின் வைரல் வீடியோ!

201611041433553766_lewis-hamilton-gets-jumped-on-by-a-tiger-following-mexican_secvpfஇங்கிலாந்து நாட்டின் பிரபல கார் பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன். சமீபத்தில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தின் 19-வது சுற்றில் முதலிடம் பெற்றார்.

இந்த போட்டியைத் தொடர்ந்து மெக்சிகோவில் உள்ள பூங்காவிற்கு சென்ற ஹாமில்டன் அங்குள்ள பெண் புலி ஒன்றிடம் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புல்வெளியில் படுத்திருக்கும் புலியை ஹாமில்டன் தொட அது தனது இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி ஹாமில்டன் மீது வைக்கிறது. அதனை எதிர்கொள்ளும் ஹாமில்டன் புலியின் வாயில் கையை விட்டு வெளியே எடுக்கிறார். சிரித்துக்கொண்டே ஹாமில்டன் புலியை எதிர்கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பார்முலா 1 கார் பந்தயத்தின் 20-வது சுற்றான பிரேசில் கிராண்ட்பிரி போட்டி வருகிற 13-ந் தேதியும், 21-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி போட்டி வருகிற 27-ந் தேதியும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...