தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புளோரிடா கேளிக்கை விடுதி தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.  Florida-club

புளோரிடா மாகாணத்தில் இரவுவிடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டு ஒருமாதங்கள் ஆன நிலையில் அங்கு மீண்டும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்து உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு தீவிரவாத செயல் அல்ல என்று அந்நாட்டு போலீசார் உறுதி செய்துள்ளனர்.   இருப்பினும் தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Comments
Loading...