தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் சென்னை சூப்ப கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணியின் எளிய இலக்கான 131 ஓட்டங்களை சென்னை அணி அசால்டாக எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.Chennai-Super-Kingsஇது சென்னை அணியின் 9வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

இது குறித்து சென்னை அணித்தலைவர் டோனி கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சர்வதேச வீரர்கள் சிறந்த தலைவர்கள் ஆவார்கள்.

மில்லரின் கேட்சை ஜடேஜா பிடித்தது மிகவும் சிறப்பான ஒன்றாகும். எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

மேலும், முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்1) விளையாடுவதன் மூலம் கூடுதலாக ஆட்டம் கிடைக்கிறது.

ஒரு ஆட்டத்தில் மோசமாக ஆடினாலும் இறுதிப்போட்டிக்கு நுழைய இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.

இந்த வெற்றி பிளே-ஆப் சுற்றில் சிறப்பாக விளையாட இயலும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

‘பிளே-ஆப்’ சுற்றில் ‘குவாலிபையர்-1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் 2வது இடத்தை பிடிக்கும் அணிகள் மோதும்.

பெங்களூர் அணி 2வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆட்டம் வருகிற 19ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

Comments
Loading...