Designed by Iniyas LTD
பூநகரியில் உவர் நிலமாக மாறியுள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு …..
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலமாக மாறியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
இத்தகவலை கிளிநொச்சி மாவட்ட செயலர்; சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் குடிநீர் பிரச்சனை ஒருபாரிய பிரச்சனையாக காணப்படுகின்றதாகவும்,. கூடுதலான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இதற்கு பிரதானமான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூநகரிப்பிரதேசத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும், அதன் பின்னர் உவர் நீர்த்தடுப்பணைகள் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டமையாலும் பூநகரிப்பிரதேசத்தைச்சூழவுள்ள உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கடல் பெருக்குக்காலங்களில் உவர் நீர் விவசாய விளைநிலங்களுக்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்களின் ஊடாக உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றதாகவும்,.
இவ்வாறு உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு பூநகரிப்பிரதேசத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிறுகுளங்களையும் புனரமைத்து மழைநீரைத்தேக்குவதன் மூலம் குறித்த நிலங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.