தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பூந்தண்டிகையில் வலம் வந்த அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார்…

யாழ்.அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை(18)   கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி உள்ளது.

கொடியேற்ற உற்சவ நாளன்று இடம்பெற்ற இரவுத் திருவிழாவின் போது அலங்கரிக்கப்பட்ட அழகிய பூந்தண்டிகையில் விநாயகப்பெருமான், மற்றும்  வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான்  வீதி உலா  வரும் காட்சி பார்க்கும் அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

உற்சவத்தில் ஊர்மக்கள் பலரும் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பத்தமேனி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இந்த மாதம்-26 ஆம் திகதி  சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...