தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு நடந்தே வந்த மணப்பெண்!

201609131623021876_cauvery-issuebride-walks-bengalore-to-vellore_secvpfபெங்களூர் பகுதியை சேர்ந்த பிரேமா(25) என்பவருக்கும், தமிழ்நாட்டின் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாளை திருமணம் நடைபெற உள்ளது.

காவிரி நதிநீர் தொடர்பான போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தற்போது பெங்களூரில் இருந்து மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

குறிப்பிட்ட தூரத்திற்கு பஸ் மற்றும் ஆட்டோவில் வந்த அவர்கள், அதன்பின்னர் வாகனங்கள் கிடைக்காததால் நடந்தே ஓசூர் புறப்பட்டனர். பின்னர் பஸ் மூலம் வாணியம்பாடி செல்ல முடிவு செய்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரேமா அளித்த பேட்டியில், ”இந்த போராட்டத்தால் நான் நிறைய சந்தோஷங்களை இழந்து விட்டேன். இந்த நாள் எனது வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. இந்தியா என்பது ஒரே நாடுதான். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை முதலில் இரண்டு மாநில மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Comments
Loading...