தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் – ஜி.கே. வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது ஒரு பீப்பாய் 30 அமெரிக்க டாலராக, வரலாறு காணாத அளவிற்கு மிகவும் சரிந்துள்ளது. ஆனால் மத்திய அரசு சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை குறைக்கவில்லை.GK-Vasan

அதற்கு மாறாக கலால் வரியை உயர்த்துவதால் அதன் முழு பலனும் மக்களுக்கு சென்றடையவில்லை. தற்போது, ஆயில் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 32 காசும், டீசல் விலையை 82 காசும் மட்டுமே சொற்ப அளவிலேயே குறைத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டில் மட்டும் கலால் வரியை 5 முறை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணய கொள்கையில் மத்திய அரசு ஒரு தெளிவான கொள்கையை இதுவரை கடைபிடிக்கவில்லை.   எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரி உயர்வை திரும்ப பெற்று உடனடியாக கச்சா எண்ணை தற்போதைய விலைக்கு ஏற்ப விலையை குறைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீனவர்கள் கைதை வலியுறுத்தி   ஆர்ப்பட்டம்  

தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கியும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பறிமுதல் செய்தும், கைது செய்தும் வருகிறது. இதற்கு முடிவு காணவும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும், மேலும் அனைத்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18-1-2016 நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணியின் சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஜி.கே.வாசன் தொடங்கிவைக்கிறார். தமிழ் மாநில காங்கிரசின் மூத்த முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும், மற்றும் தமிழ் மாநில காங்கிரசின் துணை அமைப்பின் நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர்களும், தொண்டர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...