தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெண்களுக்கான டாப் 10 இயற்கை உணவுகள்!

home-remedies-for-abortion-papayaநம்முடைய பாரம்பரிய உணவு முறையில் இயற்கை உணவுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தேங்காய், காய்கறிகள், பழங்கள் அன்றாட உணவில் இடம்பெற்றிருந்தது. நவீன வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் உணவுப் பழக்கங்களிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காரணம் எதுவாக இருந்தாலும், காய்கறிகள் பழங்களை தவிர்க்கக் கூடாது. பழங்களை உணவுடன் சேர்த்து சாப்பிட கூடாது. உணவு சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும்.

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்கள். அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கு சத்துக் குறைபாடு  பெரும்பாலும் ஏற்படுவதில்லை. ஆனால் சைவ உணவை சாப்பிடுபவர்கள் தேவையான அளவு காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்களா என்பது சந்தேகமே. தினமும் நிச்சயம் இரண்டு பழங்களை உட்கொள்ள வேண்டும். காய்கறிகளில், கிழங்கு வகைகள், கீரை வகைகள் மற்ற காய்கறிகள் தினமும் 100 கிராம் என்ற அளவில் சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக உட்கொள்ளும் போது அவை எளிதில் ஜீரணமாவதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை தரும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சீத்தாப்பழம், பலாப்பழம், சப்போட்டா போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். காய்கறிகளில் கிழங்கு வகைகளை ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்பட்சத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறைதான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதை தவிர்க்க அவர்கள் அன்றாட உணவுகளிலேயே அரோக்கிய ரெசிபிக்களை சேர்த்துக் கொண்டால் தனக்கு மட்டுமல்லாமல் குடும்பத்துக்கும் சத்தான உணவுகளை பரிமாறிய திருப்தியும் நிறைவும் ஏற்படும்.

பிரகோலி, ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகள், தயிர், கீரை வகைகள், பீன்ஸ், அடர்நிறக் காய்கறிகள், அனைத்து வகைப் பழங்கள், பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

Comments
Loading...