தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய ஐ.நா. அமைதி படையினர்

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் பணியாற்றிய ஐ.நா. வின் அமைதி படையினர் பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதாக புதிய புகார்கள் எழுந்துள்ளன.  un_peace

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப் படையினர் உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். மத்திய ஆப்பிரிக்க நாட்டில் பணியாற்றிய வீரர்கள், அடிக்கடி ஏற்படும் இனமோதல்களைத் தடுப்பதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.   ஆனால், அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதாகவும், பெண்களுக்கு எதிரான சுரண்டலில் ஈடுபட்டதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன் புகார்கள் எழுந்தன.

இதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.  இந்நிலையில், 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் தாக்கியது, பல வீரர்கள் ஒன்று சேர்ந்து ஒரே பெண் மீது பாலியல் தாக்குதல் தொடுத்தது என அமைதிப்படையினருக்கு எதிராக புதிய புகார்கள் எழுந்துள்ளன.

Comments
Loading...