Designed by Iniyas LTD
பெண் போலீசார் மீது மர்ம நபர் ஒருவர் கத்தி தாக்குதல்
பெல்ஜியம் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சர்லெராய் நகரில் இரண்டு பெண் போலீசார் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டான். குத்துவதற்கு முன்பாக அல்லாகு அக்பர்(கடவுளே சிறந்தவர்) என்று முழக்கமிட்டபடி அவர் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த தாக்குதலில் முகத்தில் பலத்த காயங்களுடன் ஒரு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மைய காவல்நிலையம் ஒன்றின் வெளிப்பகுதியில் நடைபெற்றுள்ளது. முன்னதாக பெல்ஜியம் விமான நிலையத்தில் தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதை அடுயடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்(இஸ்லாமிய தேசம்) ஜிகாதிஸ்ட் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.