தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெண் மருத்துவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தவறான சிகிச்சையால் கண் பார்வை இழந்த வழக்கில் பெண் மருத்துவர்கள் 3 பேர் மீது கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  doctor

கோவை, குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் தேவேந்திரனின் மனைவி சவுமியா பிரசவத்திற்காக 2014ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிறந்த ஆண் குழந்தைக்கு சிறிது நாட்களில் கண்ணில் வீக்கம் ஏற்பட்டது.   இது தொடர்பாக மற்றொரு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் தவறான சிகிச்சையின் காரணமாக கண்பார்வை பறிபோனது தெரிய வந்தது.

இதையடுத்து தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை இயக்குனர் மற்றும் மருத்துவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இந்த வழக்கு கோவை மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை மருத்துவர் சந்திரலேகா, மருத்துவர்கள் தீபா, கீதா பாரதி ஆகிய 3 பெண் மருத்துவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை காவல் துறையினர் நீதிபதி ரேணுகாதேவி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

Comments
Loading...