தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெப்ரவரி 26 – சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சிப்போராட்டம்

004

பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும்  சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சிப்போராட்டம் பிரான்சு நாட்டில் பிரான்சு வெளிவிவகார அமைச்சுக்கு அருகாமையில் (Place de la Invalides- metro invalides metro ligne 8-13, RER C : Invalides;) மாலை 3 மணிக்கு நடாத்த பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ளது.

2009, மே 27 முதல் பிரான்சு பாராளுமன்றம் முன்பாக வாரந்தோறும் புதன்கிழமைகளில் தொடர் போராட்டங்களை நடாத்தி பிரான்சு அரசுக்கு வாராந்த அறிக்கைகளை அளித்து வரும் மக்கள் பேரவை இந்த போராட்டத்தை ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபை அமர்வில் தமிழீழ மக்களுக்கு எதிராக 66 வருடங்களாக சிறி லங்கா அரசு நடாத்தி வரும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டியும், தமிழீழ மக்களின் ஜனநாயக விருப்புக்களை ஏற்று அரசியல் தீர்வு ஒன்றிற்கும் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப வழி வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகத் தமிழர் அனைவரும் போராடுவோம்.

ஊடகப் பிரிவு

தமழீழ மக்கள் பேரவை பிரான்சு

Comments
Loading...