தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை செலவு நிதி அதிகரிப்பு

மாதாந்த கொடுப்பனவாக 6000 ரூபாவை பெறும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவாக மேலும் 10,000 ரூபாவை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.rathakrishnan

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாக கொண்டு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு தற்போது மாதாந்த கொடுப்பனவாக 6000 ரூபாவே வழங்கபட்டு வருகின்றது. இதனால் உதவி ஆசிரியர்கள் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஆசிரியர் உதவியாளர்களுக்கு மேலும் வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 10,000 ரூபாவை வழங்க தீர்மானித்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கென பாராளுமன்றத்தின் அனுமதியைபெறுவதற்காக அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்ய்பட்டுள்ளதுடன் அனுமதி கிடைத்ததும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 16,000 ரூபா பெற வாய்ப்புள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

Comments
Loading...