தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெரும்தோட்ட தொழிலாளர்களிற்கு ஆதரவாக கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்….

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது கொழும்பு – காலி முகத்திடலில்  இன்று இடம்பெற்றுள்ளது.

”கருப்புச் சட்டைப் போராட்டம்” என இது பெயரிடப்பட்ட இந்த பபோராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு நிற ஆடைகளை  அணிந்திருந்தனர்.

கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்  இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பொதுமக்களுக்கும் அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் குறித்த  போராட்டம் இடம்பெற்றது.

இதேவேளை எந்தவொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துகொள்ள இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...