Designed by Iniyas LTD
பேட்மிண்டன் சர்வதேச தரவரிசை: சாய்னா நேவால் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை இழந்து 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முன்பு தனது முதல் இடத்தை பறிகொடுத்த ஒலிம்பிக் சாம்பியன் லீ சூருய், மீண்டும் தனது முதலிடத்தை பிடித்துள்ளார். இன்று வெளியான புதிய சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்த தரவரிசை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மேலும் சீனாவின் லீ சூருய் 85 ஆயிரத்து 217 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற கரோலின் மேரின் 80 ஆயிரத்து 752 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், சாய்னா தற்போது 79 ஆயிரத்து 192 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் ஆண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் டாப்-25 இடங்களுக்குள் எந்த இந்திய வீரர், வீராங்கனைகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.