தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேய்த்திருமணத்திற்காக கொலை செய்யப்படும் பெண்கள்

சீனாவில் கடந்த 3000 ஆண்டுகளாக பேய் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் செய்துகொள்ளாமலேயே வாலிபர்கள் இறந்துவிட்டதால், அது துரதிர்ஷ்டவசமான ஒன்று என அக்குடும்பத்தினரால் கருதப்படுகிறது.chai

இதன் காரணமாக, இறந்த பெண்களின் உடல்களை வாங்கி, இறந்துபோன வாலிபரின் கல்லறைக்கு அருகில் வைத்து திருமண சடங்குகளை நடத்தி விட்டு, அதன் பின்னர் அடக்கம் செய்து விடுகின்றனர். இந்த மூடப்பழக்கவழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்காகவே, இறந்துபோன பெண்களின் உடல்கள் கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், இதற்காக சில பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்பது தான். இதற்காக ஊனமுற்ற இரண்டு பெண்களை, 3 நபர்கள் சேர்ந்து கொலை செய்து சந்தையில் விற்பனை செய்துள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பெண் ஒருவருக்கு அபாயகரமான மருந்தினை உட்செலுத்தி கொலை செய்து, அதனை சந்தைக்கு எடுத்துச்செல்லும் வழியில் இவர்கள் பிடிபட்டுள்ளனர். தற்போது இதுதொடர்பான விசாரணையை பொலிசார் நடத்தி வருகின்றனர்.

Comments
Loading...