தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேஸ்புக் ஊடாக எச்சரித்த மாணவன் அதே குழியில் வீழ்ந்து பலி!

தம்பதெனிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருந்த கல் குழியொன்றில் வீழ்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்பதெனிய, மெதவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய லக்ஷான் சானக என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் கருங்கல் உடைப்பால் ஏற்பட்டிருந்த இந்த கல் குழி தொடர்பாக அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் பேணப்படவேண்டிய அவதான நிலை தொடர்பாக குறித்த பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், துரதிஷ்டவசமாக குறித்த குழியில் அவரே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...