தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை ..

இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இத்தகவலை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18ம் திகதி காலை 10.00 மணிக்கு வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் குறித்த கைதிகள் விடுதலை செஉய்யப்படவுள்லதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு விடுவிக்கப்படவுள்ள கைதிகளில் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒரே தடவையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...