தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொறுப்புக்கூறுவதில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக முடியாது – ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் இருந்து இலங்கை  அரசாங்கம் விலக முடியாது என ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

இலங்கை  ஊடகவியலாளர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  குறித்த விடயம்    தொடர்பில் தொடர்ந்தும் இலங்கை  அதிகாரிகளுடன்  தாம் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும்  அவர் இதன்போது தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...