Designed by Iniyas LTD
பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை பாரிய பின்னடைவு சந்தித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..
இலங்கையின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைக்கான முயற்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த2015 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளவாறு,
நீதிப் பொறிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாக இலங்கையின் இராஜதந்திரிகள் பல்வேறு அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து நீதிப் பொறிமுறை, பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு, காணி விடுவிப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் என ,
நான்கு துறைகளில் தனியான பொறிமுறைகளை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நினைவுபடுத்தியுள்ளது.
எனினும், குறிப்பாக காணி விடுவிப்பு சிவில் சமூக சுதந்திரம் மற்றும் பொது மக்களுக்கான ஆலோசனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், நிலைமாறு கால நீதிப் பொறிமுறை விடயத்தில் அரசின் செயற்பாடுகளில் குறைபாடு நிலவுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.