தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொலிஸார் கொலை தொடர்பில் , முன்னாள் போராளிகளிற்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ள இராணுவதளபதி…

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிஸார்  கொல்லப்பட்ட நிலையில் , நாட்டில்  தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில்  விசேட பொலிஸ் பிரிவினரும் புலனாய்வுத்துறையினரும் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்,  அவர்களுக்கு இராணுவத்தினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இது தனியொரு சம்பவம் என்ற போதிலும் நாட்டின் தற்போதைய சூழலில் இதனை புறக்கணிக்க முடியாது என  கூறியுள்ள   இராணுவதளபதி உடனடி விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும் எனவும்  கூறியுள்ளார்.

மேலும்  பொதுமக்கள் இவ்வாறன குற்றங்களுக்கெதிராக குரல்கொடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு  புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளதாகவும்   இராணுவதளபதி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...