தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொள்ளாச்சியில் வீதி விபத்து! பெண் பலி ஆறு பேர் படுகாயம்

201609011238453175_car-accident-woman-dead-in-pollachi_SECVPFஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 50). இவர் தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேருடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று காரில் புறப்பட்டனர்.

நேற்று இரவு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து அதிகாலை ஊருக்கு புறப்பட்டனர். காரை பழனிச்சாமியின் மருமகன் ஓட்டினார்.

கார் அதிகாலை 4 மணியளவில் திருப்பூர் மங்களம் ரோடு கணியாம்பூண்டி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழுந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் 7 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

படுகாயம் அடைந்த மற்ற 6 பேரும் அலறி சத்தம்போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments
Loading...