தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போகோஹரம் தீவிரவாதிகளிடம் இருந்து 5 ஆயிரம் பிணை கைதிகள் விடுவிப்பு!

201606261746402369_Nigerian-army-says-it-freed-over-5000-people-held-by-Boko_SECVPFகிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தற்கொலைப்படை மற்றும் குண்டுவீச்சு சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவர்களால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நிலை என்னவாயிற்று? என்பது தொடர்பான எவ்வித விபரமும் தெரியாத நிலை நீடித்து வருகிறது.

இந்த கும்பலின் தாக்குதல்களுக்கு நைஜீரியா, சாட் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 15 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்து, அண்டை நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போகோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் இந்த தீவிரவாத கும்பலை வேட்டையாட கடந்த ஒருவாரமாக கிராமம், கிராமமாக அதிரடி சோதனைகளை ராணுவத்தினர் நடத்தினர். இதில் ஆறு போகோஹரம் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் பிடியில் இருந்து சுமார் 5 ஆயிரம் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நைஜீரியா ராணுவம் இன்று அறிவித்துள்ளது.

Comments
Loading...