தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போகோஹாரம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இரண்டு நகரங்கள் மீட்பு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டத்தை கடைபிடிக்க வலியுறுத்தி 2002 ஆம் ஆண்டுமுதல் அந்த நாட்டு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 2009 ஆண்டு முதல் நைஜிரியாவில் தாங்கள் கைபற்றிய பகுதிகளை இஸ்லாமிய நாடாக அறிவித்து கொண்டனர் இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இவர்களால் 30 லட்சம் மக்கள் பாதிக்கபட்டு உளளனர்.  . இந்த தீவிரவாதிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை கடந்த மாதம் நைஜீரியா அரசு அறிவித்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த தீவிரவாதிகள் அங்கு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். bokoram

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் தீவிரவாதிகளின் வசம் உள்ளது.  இந்தநிலையில் நைஜீரியாவின் அடமவா மாநிலத்துக்கு உட்பட்ட முபி மற்றும் மல்கா நகரங்களை சமீபத்தில் போகோ ஹரம் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதற்காக நடந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டதுடன், பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நகரங்களில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை தீவிரவாதிகள் விரட்டியடித்தனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இந்த நகரங்களை மீட்க, ராணுவம் அதிரடியாக களமிறங்கியது. இந்த நடவடிக்கையில் உள்ளூர் வேட்டைக்காரர்கள் மற்றும் பொதுமக்களால் உருவாக்கப்பட்ட அமைதி காப்புக்குழுவினரும் ராணுவத்துக்கு உதவியாக செயல்பட்டனர். இந்த குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தீவிரவாதிகள் வசமிருந்த அந்த 2 நகரங்களும் மீட்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது 75 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் வேட்டைக்காரர் ஒருவர் தெரிவித்தார். எனினும் இந்த தகவலை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

Comments
Loading...