தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு வாகன பேரணி..

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வாகன பேரணி  ஒன்று இன்று காலை 11.30 மணிக்கு மல்லாவி  பகுதியில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

துணுக்காய்  பிரதேச செயலகம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் துணுக்காய்  பிரதேச சபை பாடசாலை மாணவர்கள் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இன்று காலை மல்லாவி அணிஞ்சியன்குளம் பாடசாலை   முன்பாக ஆரம்பித்த இந்த கவனயீர்ப்பு வாகன  பேரணியானது துணுக்காய்  பிரதேச செயலகத்தை சென்றடைந்தது

மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் பேரணியாக சென்றதோடு பேரணி மல்லாவி மத்திய கல்லூரியை அடைந்தபோது மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தியதோடு பேரணி துணுக்காய் பிரதேச செயலகம் சென்றபோது துணுக்காய் பாடசாலை மாணவர்களும் பிரதேச செயலகம் முன் கவனஈர்ப்பில் ஈடுபட்டு மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

போதைப்பொருள் தடுப்பு தேசிய வாரம் கடந்த 2018.06.26 முதல் 2018.07.02 வரை நடைமுறைப்படுத்தப்பட்டது இதன் இறுதிநாளான இன்று மக்களை விழிப்புணர்வூட்டும் முகமாக இந்த கவனயீர்ப்பு வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது  

Comments
Loading...