தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போனில் பேசியபடி சென்றவர் மீது ரயில் மோதி பலி!

800a9bc68b038658e8a2f2d2399ef36c347கைபேசியில் உரையாடிக்கொண்டு தண்டவாளம் அருகாக நடந்த சென்ற இளைஞர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – பரந்தனில் நேற்று மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் வட்டக்கச்சியை சேர்ந்தவரும் பரந்தனில் வசித்து வருபவருமான ரிக்ஷன் (வயது -24) என்பவரே மேற்படி சம்பவத்திலேயே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் இரு நண்பர்களுடன் நின்றிருந்தார் என்றும் அச்சமயம் வெளிநாட்டில் இருக்கும் அவரின் பெற்றோர் அழைப்பு எடுக்கவே கைபேசியில் பேசியவாறு தண்டவாளம் அருகாக நடந்து சென்றார் என்றும் கூறப்படுகின்றது. தண்டவாளம் அருகாகக் கதைத்தவாறு சென்றவரை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் ஸ்ரீ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...