Designed by Iniyas LTD
போராட்டக்காரர்களை புகைப்படமெடுத்து மிரட்டும் புலனாய்வாளர்கள்!
காணாமல் போனவர்களின் உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் காணாமல் போனவர்களின் உறவுகள் நேற்றுக்காலை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தமது காணாமல் போன பிள்ளைகள் மற்றும் உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் தர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் கோரி இத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இரவிரவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் கையில் கமெராவுடன் சென்று மக்களையும், அவர்கள் கூறும் கருத்துக்களையும் ஒளிப்பதிவு செய்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் படம் எடுத்து வருகின்றனர்.