Designed by Iniyas LTD
போரின் போது படையினர் எந்த தவறையும் செய்யவில்லை – மகேஸ்சேனநாயக்க..
போரின் போது படையினர் எந்த தவறையும் செய்யவில்லை என இலங்கை சிங்கள இனவாத இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளார்.
அதோடு தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
வெலிகமவில் உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு விசாரணையை எதிர்கொள்வதற்கும் தாங்கள் அச்சம் கொள்ளவில்லை என்றும், எந்தவொரு போரிலுமே பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படும் எனவும் அது இல்லாமல் போரை நடத்த முடியாது என்றும் மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளார்.
மேலும் கடந்த காலத்தை தோண்டக் கூடாது எனவும், கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள நல்ல விடயங்களைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அனைத்துலக விசாரணை தேவையில்லை என்றும், எமது நீதித்துறைக்கு அதற்கான தகுதி உள்ளதாகவும் மகேஸ் சேனநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.