Designed by Iniyas LTD
போர்குற்ற விசாரணைக்கு சர்வதேச நிபுணர்களை மட்டும் உதவிக்கு அழைக்கப்படுவார்களாம்?
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் போது சர்வதேசத்தின் நிபுணர்கள் மாத்திரம் உதவிக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால் வெளிநாட்டு நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேசத்தின் தரப்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதற்காக வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இதனை ஏற்க முடியாது என்று பொன்சேகா அறிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவும் முக்கிய யுத்தக்குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.