தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முயன்ற இருவர் கைது!

fake-visa-415x260போலி விசாவை பயன்­ப­டுத்தி இத்­தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்­பட்ட இரண்டு இளை­ஞர்­களை கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கைது­செய்­துள்­ளனர். நேற்று அதி­காலை வேளையில் இவர்கள் இரு­வ­ரையும் கைது செய்­த­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­வித்­தனர்.

இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி ஆகிய பகு­தி­களைச் சேர்ந்த 31 மற்றும் 28 வய­து­க­ளை­யு­டைய இருவர் ஓமான் விமான சேவைக்கு சொந்­த­மான டப்­ளியூ. வை.372 என்ற விமானத்தில் இத்­தாலி ஊடாக பிரான்­ஸுக்கு செல்ல கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு வந்­துள்­ளனர்.

இதன்­போது, அவ்­வி­ரு­வரும் ஜேர்­மனி தூத­ரக அதி­காரி ஒரு­வரின் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளனர். இதன்­போதே குறித்த அதி­காரி குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அளித்த தக­வலின் பிர­காரம் இரு­வரும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இத­னை­ய­டுத்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் இரண்டு இளை­ஞர்­களும் உண்­மை­யான கடவுச் சீட்­டுக்­க­ளையே வெளி­நாடு செல்ல பயன்­ப­டுத்­தி­யுள்ள போதும், பிரான்­ஸுக்குள் நுழை­வ­தற்­கான விசா­வா­னது போலி­யா­னது என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் கைதான இரு­வ­ரி­னதும், பிரான்ஸில் வசிக்கும் உற­வி­னர்கள் யாழில் உள்ள வெளிநாட்டு முகவர் ஒரு­வ­ருக்கு வழங்­கிய பணத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வாறு போலி விசாக்­களில் அவ்­விரு இளை­ஞர்­களும் அனுப்­பப்பட்­டுள்­ளதும் மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டுள்ளனர்.

Comments
Loading...