Designed by Iniyas LTD
பௌத்த தேரரை தேடும் பொலிஸார் – மக்களிடம் பலகோடி மோசடி..
மக்களிடம் கோடி கணக்கில் பணம் மோசடி செய்து பௌத்த பிக்கு ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தேரர் கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள பல மக்களிடம் கோடி கணக்கில் பணம் மோசடி செய்த அஹுன்கல்ல விகாரையின் தேரரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு வாரங்களாக குறித்த தேரர் விகாரையில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.